தந்தை – மகள் பாசத்தை உணர்வுப்பூர்வமாகப் பேசும் ‘அப்பா குட்டி’ – விஜய் ஆண்டனி!
தந்தை – மகள் பாசத்தை உணர்வுப்பூர்வமாகப் பேசும் ‘அப்பா குட்டி’ – விஜய் ஆண்டனி!
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேடையேறிய ஃபாத்திமா விஜய் ஆண்டனி – நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற முன்வெளியீட்டு விழா!
சென்னை: தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம், பிரிவு, உணர்வுகள் என குடும்ப உறவுகளின் ஆழத்தைப் பேசும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் இப்படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிளாக்மெயில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்...
