Tuesday, October 27
Shadow

Tag: #aram #nayanthara #gopinayanar #gibbran

நயன்தாராவின் உறுதி தான் அறம் இயக்குனர் – கோபி நயினார்.

நயன்தாராவின் உறுதி தான் அறம் இயக்குனர் – கோபி நயினார்.

Latest News
KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முன்னதாக நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்த படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக பார்த்த என்னை சினிமாவில் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கோபி. நடிகர் நாகேஷ் கூட முதல் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் தான் நடித்தார், நீங்க நல்ல வருவீங்க என்று சொன்னார் இயக்குனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பெரிய ரசிகன், அவருடன் நடித்த...
நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அறம்’

நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அறம்’

Latest News
பெண் சமத்துவம் என்பதை வெறும் பேச்சில் மட்டுமே கொண்டுள்ள பல துறைகள் இருக்கும் இக்காலத்தில், அதனை நடைமுறையிலும் செயலாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா துறை. மிக வலுவான முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள 'அறம்' படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார். இது ஒரு சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படமாகும். இப்படத்தை தயாரித்துள்ள KJR ஸ்டுடியோஸ், பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை கையாளவுள்ளனர். ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக இப்படத்திற்கு மிகப்பெரிய பேனர்கள் தமிழகமெங்கும் பல திரையரங்கங்களில் எழுப்பப்படவுள்ளன. '' 'அறம்' படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. நயன்தாரா அவர்களின் பெரிய மார்க்கெட் வேல்யூவிற்கு ஈடான விளம்பர யுக்திகளை கையாள்வதே சரி'' என்கிறார் 'KJR ஸ்டுடியோஸ்' ராஜேஷ் J கொட்டப்படி. தென்னிந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை ...
இளம் திறமையாளர்களே – அறம் பட குழு கொடுக்கும் ஒரு அரிய வாய்ப்பு !

இளம் திறமையாளர்களே – அறம் பட குழு கொடுக்கும் ஒரு அரிய வாய்ப்பு !

Latest News
நயன்தாரா நடிப்பில் அறம் திரைப்படம் அடுத்த வாரம் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அறம் ஒரு பொழுதுபோக்கு படத்தையும் தாண்டி இன்றைய மக்களின் முக்கிய பிரச்சனையான தண்ணீர் பற்றி எடுத்து சொல்லும் ஒரு படம். ஒவ்வொரு படத்தின் ப்ரோமோஷன்களில் புடவை , மொபைல் அல்லது படத்தின் நடித்த நடிகர்களை நேரில் பார்க்கவைப்பது போன்ற விஷயங்கள் செய்வார்கள். ஆனால் அறம் குழு ஒரு படி மேல சென்று இளம் தமிழ் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுக்கு வளர உதவுவதற்கும், அவர்களை உலகிற்கு வெளிப்படுத்தவும் பணரீதியாக உதவி செய்ய முன்வந்துள்ளனர். அறம் படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சம்பவத்திலிருந்து இந்த யோசனை வந்துள்ளது. அறம் படப்பிடிப்பின் போது நயன்தாரா, தயாரிப்பாளர்களும் குழுவினரும் ஒரு இளம் விஞ்ஞானியை சந்தித்தனர், அந்த இளம் விஞ்ஞானி தயாரித்துள்ள ஒரு பொருள் நம் நாட்டின் மிக முக்கிய வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளது. ஆன...
நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் “அறம்”

நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் “அறம்”

Latest News
சமுதாய அவலங்களை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ள படம் தான் 'அறம்'. கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கொட்டப்படி J ராஜேஷ் தயாரித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'அறம்'. 'விக்ரம் வேதா' போன்ற தரமான படங்களை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்து , தங்களது நிறுவனத்துக்கு பெரும் பெயரை ஈன்றெடுத்த 'Trident Arts' நிறுவனம் 'அறம்' படத்தை நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளது. இது குறித்து 'Trident Arts' ரவீந்திரன் அவர்கள் பேசுகையில், '' இந்த வருடத்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக 'அறம்' இருக்கும். அவ்வளவு வலுவான கதையம்சம் கொண்ட படம் இது. இயக்குனர் கோபி நைனார் இந்த கதையை அருமையாக கையாண்டுள்ளார். ஒரு நேர்மையான கலெக்டராக நயன்தாரா அசத்தியுள்ளார். 'அறம்...
‘அறம்’ படத்திற்கு  ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

‘அறம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

Latest News
ஒரு படத்தின் வெற்றிக்கும், மக்கள் மேல் அது ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் அப்படத்திற்கு சென்சார் குழு என்ன சான்றிதழ் வழங்குகிறது என்பது ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கும். நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கோபி நைனார் இயக்கத்தில் கொட்டப்படி J ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அறம்'. சென்சார் குழுவின் தணிக்கைக்கு சென்ற இப்படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இக்கதையையும், படத்தில் துணிவாகவும் திறம்படவும் அலசப்பட்டிருக்கும் சமுதாய பிரச்சனைகளையும் மனமார பாராட்டியுள்ளனர். இந்த பாராட்டு 'அறம்' பட குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் விரைவில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது. ஜிப்ரானின் இசையில், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் 'அறம்' உருவாகியுள்ளது....