காட்டு யானையின் பின்னணியில் பழங்குடி மக்களின் வாழ்க்கைப் போராட்டம்… சசிகுமார் வெளியிட்ட ‘அரிகொம்பன்’ டீசர்!
காட்டு யானையின் பின்னணியில் பழங்குடி மக்களின் வாழ்க்கைப் போராட்டம்… சசிகுமார் வெளியிட்ட ‘அரிகொம்பன்’ டீசர்!
காட்டு யானைக்கும் மனிதர்களுக்குமான உறவை மையமாக வைத்து, பழங்குடி மக்களின் வாழ்வியலையும் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் பேச வருகிறது ‘அரிகொம்பன்’ திரைப்படம். இப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டுள்ளார்.
‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்டெயில்’ உள்ளிட்ட படங்களில் நடித்த மிதுன் மகேஸ்வரன், தற்போது இயக்குநராகவும் கதாநாயகனாகவும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் அவரே இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம்தான் ‘அரிகொம்பன்’.
காட்டு யானையை வெறுமனே ஒரு விலங்காகக் காட்டாமல், அது வாழும் வனப்பகுதியைச் சுற்றி வாழும் பழங்குடி மக்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களின் வாழ்வாதாரம் மற...
