ஏ ஆர் முருகதாஸ் நாளை டிவிட்டரில் இதை வெளியிட உள்ளார்???
ஆக்ஷன் கிங் அர்ஜுன் தயாரித்து , இயக்கும் திரைப்படம் "சொல்லிவி டவா" இத்திரைப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் நாளை (7.11.2017) மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் தயாரித்து, இயக்கும் திரைப்படம் "சொல்லிவிடவா" . இத்திரைப்படத்தில் கதாநாயகனாக புதுமுக நடிகர் சந்தன் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார்.இத்திரைப்படத்திற்கு ஜேஸ்ஸி ஃகிப்ட் என்பவர் இசையமைக்கிறார், H.C.வேணுகோபால் ஒளிப்பதிவு செய்கிறார்.இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம் இரு மொழிகளில் உருவாகிறது.ஏற்கனவே "சொல்லிவிடவா" திரைப்படத்தில் ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது....

