ஏண்டா இந்த படத்தில் நடித்தேனோ என்று வேதனை படும் ஷாலினி பாண்டே
அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. முதல் படத்திலே நல்ல பெயரை பெற்றதால் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சமீபத்தில் வெளியான `நடிகையர் திலகம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `100% காதல்', ஜீவா ஜோடியாக `கொரில்லா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவுக்கு வந்தது பற்றி ஷாலினி பாண்டே கூறியதாவது
சினிமாவில் நடிக்க எனது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும்படி நிர்ப்பந்தித்தனர். அதை மீறி நாடகங்களில் நடித்தேன். பிறகு சினிமா வாய்ப்பு தேட வீட்டில் சண்டை போட்டுவிட்டு மும்பை சென்றேன். அப்போது எனது தந்தை நீ தெருவில் பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார். மும்பையில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ தனியாக வீடு கொடுப்பது இல்லை.
இதனால் இரண்டு ஆண்கள்...
