அட்ஜஸ்மெண்ட் என்பது சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறைகளிலும் உண்டு – நடிகை அர்த்தனா.
இளமை துள்ளும் சிரிப்பு, துறு துறு கண்களில் கொஞ்சும் மலையாளக் குரலில் திக்கி திக்கி மழலைத் தமிழ் பேசுகிறார் நடிகை அர்த்தனா.
தொண்டன் மூலம் அறிமுகமாகி இப்போது செம படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அர்த்தனாவுடன் ஒரு தேநீர் சந்திப்பில்....
உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்? எப்படி சினிமாவிற்குள் வந்தீர்கள் ?
சின்ன வயசிலிருந்தே நடிப்பு எனக்கு பிடிச்ச விசயம். அப்பா அம்மா நான் எல்லாரும் திருவனந்தபுரம் தான். படிச்சது எல்லாமே அங்கதான். நான் அப்பா அம்மா செல்லம். சின்ன வயசு ஸ்கூல் படிக்கும் போதே டிராமா, கல்ச்சுரல் எல்லாதிலும் நடிப்பேன். ஸ்கூல் முடிக்கும்போதே நான் டீவியில் தொகுப்பாளராக பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
காலேஜ்ல விஸ்காம் முடிச்ச பின்னாடி ஒரு மலையாளப்படத்துல சுரேஷ் கோபி சார் கசினுக்கு ஜோடியா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அதற்குப்பிறகு ஒரு தெலுங்குப்படம் பண்ணினேன். அப்புற...
