Saturday, April 18
Shadow

Tag: #arunvijay #boxer #national

தேசிய அளவில் மெடல்கள் பெற்ற 20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன்  அருண் விஜயின் திடீர் சந்திப்பு

தேசிய அளவில் மெடல்கள் பெற்ற 20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன் அருண் விஜயின் திடீர் சந்திப்பு

Latest News, Top Highlights
அருண் விஜய்க்கு விளையாட்டுகளின் மீதிருக்கும் தணியாத பேரார்வம் அனைவரும் அறிந்ததே. இது வெறும் வாய்வழிச் செய்தி மட்டும் அல்ல. தொடர்ந்து கட்டுக்கோப்பாகத் தமது உடலை அவர் வைத்திருப்பதும், அன்றாடம் திவிரமாக அவர் உடற்பயிற்சி செய்வதும் காரணங்களாகும். அருமையான ஆஜானுபாகுவான தோற்றமும் உடல் வலுவும் கொண்ட இவர், தனக்குள் பெருக்கெடுக்கும் விளையாட்டு ஆர்வத்தைத் தன் மட்டோடு அடக்கிக்கொள்ளவில்லை. தேசிய அளவில் மெடல்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20  குத்துச்சண்டை வீர்களுக்கும் (தங்கம் வென்ற ஆண்கள் 8, பெண்கள் 3, மற்றும் வெள்ளி பெற்றவர்கள் 9) பாராட்டுகளைத் தெரிவிக்கும் விதமாகத் தமது ஆதரவுக் கரத்தையும் நீட்டியிருக்கிறார். ஒலிம்பிக்ஸ் கேம்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குத்துச்சண்டை சேம்பியன்ஷிப் போட்டிகளில் ரன்னர் சேம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடு பயிற்சியாளர் செந்தில்நாதனுக்...