அருவி மிக சிறந்த படம் நான் அதை ஒன்னும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை – லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இயக்குநர் பால்கி இயக்கியுள்ள இந்திப்படம் 'பேட்மேன்'. அக்ஷய்குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இதன் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. "தமிழர்கள் யாருமே தங்களுடைய கதைகளை இயக்குவதில்லை. இந்திப்பட இயக்குநருக்கு ஒரு தமிழரின் கதையைச் சொல்ல வேண்டும் என தெரிந்திருக்கிறது" என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
'பேட்மேன்' குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் "தமிழகத்தில் திறமையான இயக்குநர்கள் கிண்டல் செய்தும், மற்றவர்களின் வேலையை சிறுமைப்படுத்தியும், அவதூறுபடுத்தியும் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது, பாலிவுட்டில் நிஜ நாயகர்களைப் பற்றிய படங்கள் எடுக்கிறார்கள். நிஜ பேட்மேனை சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி" என்று ...
