சமூக விழிப்புணர்வு கொண்ட ” அசுரவதம்” 29ஆம் தேதி வெளியாகிறது
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் " அசுரவதம்". கோவிந்த் வசந்த் இசை அமைத்து இருக்கும் ,இந்த படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகிறது.இந்த படத்தின் பத்திக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
"சசிகுமார் சாருக்கு இது மிக முக்கியமான ஒரு படம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறார். சசிகுமாருடன் இது எனக்கு 7 வது படம், எல்லாமே தனித்துவமான படங்கள். வெறும் 49 நாட்களில் மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட படம். எழுத்தாளராக ஒரு இடத்தில் உட்கார்ந்து எழுதிக் கொண்டு இருந்தவரை இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் புரட்டி எடுத்திருக்கிறோம். கிடாரி படத்தில் அவருடன் பழகியிருக்கிறேன். அதனால் அவரும் சொன்ன விஷயங்களை எந்த தயக்கமும் இல்லாமல் செய்தார். கதிர் இந்த படத்தின் முக்கியமான பில்லர். சமூக விழிப்புணர்வு இந்த...
