சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் ட்ரைலர்
இயக்குனரும், நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. விஜய் டி.வி.யிலிருந்து வந்த இன்பசேகர் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் உமாபதிக்கு ஜோடியாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், பாண்டியராஜன், மனோபாலா முதலானோர் நடிக்க டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. தம்பி ராமையாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்பதால் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, துரை செந்தில்குமார், சுராஜ், பிரபு சாலமன், ஏ.எல்.விஜய், பொன்வண்ணன், அறிவழகன், ஐக், மனோபாலா என பல இயக்குனர்கள் படை சூழ நடிகர் சிவகார்த்திகேயன் டிரைலரை வெளியிட்டார். அதற்கு முன்பாக சிவகார்த்திகேயன் பேசும்போது
‘‘தம்பி ராமையா என் குடுபத்தை சேர்ந்தவர். அவரை நான் சித்தப்பா என்று தான் கூப்பிடுவேன். அவரது ...
