‘செம போத ஆகாத’ பட வெளியீட்டாளரின் நஷ்டத்தை மின்னல் வீரனில் ஈடுகட்டும் அதர்வா
கோடிகளில் வியாபாரம் புழங்கும் திரைத்துறையில், எல்லோருக்குமே வெற்றி என்பது கிடைத்து விடுவதில்லை. படங்கள் தோல்வி அடையும்போது கோடிக்கணக்கில் ஏற்படுகின்ற நட்டம் தயாரிப்பாளர் மீது மட்டுமல்ல, சில சமயம் தயாரிப்பாளர் அல்லது படத்தில் நடித்த நடிகர் மீதோ நம்பிக்கை வைத்து படத்தை வெளியிடும் வெளியீட்டாளர்கள் தலை மீதும் ஏறும்.
நம் தமிழ் திரையுலகில் ஒருசில நடிகர்கள், இப்படிப்பட்ட சூழலில் தங்களது சம்பளத்தை விட்டுக்கொடுத்தோ, அல்லது அல்லது நஷ்ட ஈடாக ஒரு தொகையை திருப்பிக்கொடுத்தோ வெளியீட்டாளர்களின் நட்டத்தை சரிசெய்வதும் நடக்கிறது. ஆனால் அப்படி செய்பவர்கள் இங்கு வெகு சிலர் தான்.
குசேலன் படம் தோல்வியால் தனது குருநாதர் கே.பாலசந்தர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை, படம் வாங்கியவர்களுக்கு நஷ்ட ஈடாக திருப்பிக்கொடுத்த வரலாறு இன்றும் பேசப்படுகிறது.. இதுபோல ...
