மற்ற படங்களில் இருந்து என்னை வேறு படுத்திருக்கும் அதி மேதாவிகள் -இஷாரா நாயர்
சதுரங்க வேட்டை' படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்தவர் இஷாரா நாயர். இவரின் நடித்த பானு என்கின்ற வெகுளி கதாபாத்திரம் மூலமாக ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்ற இஷாரா நாயர், தற்போது 'அதி மேதாவிகள்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி, 'அப்சலூட் பிச்சர்ஸ்' சார்பில் மால்காம் தயாரித்து இருக்கும் இந்த 'அதி மேதாவிகள்' திரைப்படத்தில், பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி (மோ படப் புகழ்) கதாநாயகனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
"நான் முன்பு நடித்த கதாபாத்திரத்தின் சாயல் என்னுடைய புதிய கதாபாத்திரத்திற்கு இருக்க கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்து தேர்வு செய்த திரைப்படம் தான் 'அதி மேதாவிகள்'. இந்த படத்தில் சுஜி என்கின்ற கதாபாத்திரத்தில் நான் நடித்து இருகின்றேன். இரண்டு நண்பர்கள் தங்களின் கல்லூரியில் வைக்கும் அரியர்ஸ...
