அவள் – திரைவிமர்சனம் ( தமிழ் சினிமாவை மிரட்டுகிறாள்) Rank 4/5
ஹாலிவுட் திகில் படங்களுக்கு தமிழ் திகில் படங்கள் இணையில்லை என்ற காலம் 'அவள்' படம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. கதையம்சத்திலும், சிறந்த தொழிலநுட்ப திறனாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி போட்டு பேய் ஓட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது. சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி நடிப்பில், அறிமுக இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸாகியுள்ள 'அவள்',கூட்டம் கூட்டமாக மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்துள்ளது. இப்படத்தை சித்தார்த்தின் 'Etaki Entertainment' நிறுவனம், 'Viacom18 Motion Pictures' நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளது. 'அவள்' படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்துள்ள 'Trident Arts' ரவீந்திரன் அவர்கள் இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்ப்பால் உற்சாகத்தில் உச்சியில் உள்ளார்.
இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல்குல்கர்னி, சுரேஷ், அனிஷா விக்டர் மற்றும் பலர் நடிப்பில் கிரீஷ் இசைய...




