22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ்) வருகிற ஏப்ரல் 27 வெளியாகிறது
மார்வல் காமிக்ஸ் அனைத்து தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த தயாரிப்பு நிறுவனம். மார்வல் காமிக்ஸ் மூலம் திரையில் வந்து நம்மை கவர்ந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களின் மனத்திலும் தனி இடம் உண்டு. அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து நம்மை மகிழ்விக்கும் வகையிலான படைப்பாக கொடுப்பதில் அவேஞ்சர்ஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு வெளிவந்த அவேஞ்சர்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் முன்னர் அவேஞ்சர்ஸ் (2012) , இதன் இரண்டாம் பாகம் அவேஞ்சர்ஸ் அல்ட்ரான் ( 2015) ஆகியவை வெளியாகி வெற்றி பெற்றுள்ளது தற்போது இதன் மூன்றாம் பாகம் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் ) 22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு ( தாநோஸ் ) மோதும் வகையில் தற்போது வெளியாகவுள்ளது.
படத்தில் இடம்பெற்றுள்ள எல்லா கதாபாத்திரங்கள...
