“இசையும், இளமையும், காதலும் கலக்கும் ‘பாதாம்கீர்’ – கௌதம் கார்த்திக் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் வைரல்!”
“இசையும், இளமையும், காதலும் கலக்கும் ‘பாதாம்கீர்’ – கௌதம் கார்த்திக் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் வைரல்!”
தமிழ் திரையுலகில் இளம் தலைமுறையை கவரும் வகையில் ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘பாதாம்கீர்’. லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கும் இப்படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை முன்னணி நடிகர் தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் வெளியிட்டுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
வண்ணமயமான பின்னணியில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் ஜாலியான தோற்றத்தில் காட்சியளிக்கும்...
