துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல முன்னனி நடிகை மகள்
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் வர்மா. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பாலா இயக்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு நேபாளத்திலுள்ள காட்மண்டுவில் நடைபெற்றது.
இப்படத்திற்காக பல மாதங்களாக தன்னை முழுமையாக தயார்படுத்தி வந்த துருவ் விக்ரம், தற்போது தாடி, மீசை, ஹேர்ஸ்டைல் என பாலாவின் கைவண்ணத்தினால் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார்.
இந்த படத்தில் துருவ் விக்ரம் தவிர மற்ற நடிகர் - நடிகைகள் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு கதாநாயகி இல்லாமல் தான் நடைபெற்றது.
தற்போது வர்மா படத்தில் நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் து...






