Thursday, April 30
Shadow

Tag: #baloon #jai #anjali #jananiiyer #yogibabu #yuvanshankarraja #srinish

பலூன் படத்தின் நாயகன் ஜெய் இல்லை கதை தான் இயக்குனர் – சினிஷ்

பலூன் படத்தின் நாயகன் ஜெய் இல்லை கதை தான் இயக்குனர் – சினிஷ்

Latest News, Top Highlights
70MM Entertainment நிறுவனம் சார்பில் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி தயாரிக்க, ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி  நடிக்க,  சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பலூன்'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆரா சினிமாஸ் மகேஷ் வெளியிடும் இந்த படத்தின் ட்ரைலர் சென்னையில் வெளியிடப்பட்டது. சினிமாவில் எனது முதல் படம், நண்பர் அருண் பாலாஜி தான் இயக்குனர் சினிஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் கதை சொன்னார், அவர் சொன்ன விதம் எனக்கு ரொம்ப பிடித்தது. அவர் ஜெயிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. போஸ்டர் நந்தகுமார் உனக்கு ஏன் தேவையில்லாத வேலை என்றார். ஆனாலும் படத்தை நாங்க ஆரம்பிச்சிடுறோம், எங்களுக்கு உதவி தேவைப்படுறப்போ மட்டும் உதவி பண்ணுங்கனு அவரை கேட்டுக்கிட்டேன். நந்தகுமாரும், தேனப்பனும் எங்களுக்கு நிறைய உதவ...