Friday, October 9
Shadow

Tag: Baththa success meet

‘பத்தா’ வெற்றி விழா: “வித்தியாசமான சினிமாவுக்கு கிடைத்த வெற்றி” – விஜய் சேதுபதி, அட்லீ உள்ளிட்டோர் நெகிழ்ச்சி!

‘பத்தா’ வெற்றி விழா: “வித்தியாசமான சினிமாவுக்கு கிடைத்த வெற்றி” – விஜய் சேதுபதி, அட்லீ உள்ளிட்டோர் நெகிழ்ச்சி!

Latest News, Top Highlights
‘பத்தா’ வெற்றி விழா: “வித்தியாசமான சினிமாவுக்கு கிடைத்த வெற்றி” – விஜய் சேதுபதி, அட்லீ உள்ளிட்டோர் நெகிழ்ச்சி! அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “ஒரு திரைப்படத்தை பார்வையாளர்களிடம் ஒப்படைத்த பிறகு, அவர்கள் அதை ரசிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இயக்குநர் பாலாஜியின் முந்தைய படங்கள் மீது எனக்கு இருந்த நம்பிக்கையே ‘பத்தா’ படத்தில் நடிக்க காரணம். வித்தியாசமான சிந்தனையுடன் உருவாகும் திரைப்படங்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். இந்த வெற்றி பலரையும் புதுமையான படைப்புகளை உருவாக்க ஊக்குவிக்கும்” என்றார். இயக்குநர் பாலாஜி தரணீதரன், தயாரிப்ப...
“மக்களைச் சந்திப்பது கீழே இறங்குவதல்ல… அதுதான் உயர்ந்த நிலை!” – ‘பத்தா’ வெற்றி விழாவில் அட்லியின் நம்பிக்கை

“மக்களைச் சந்திப்பது கீழே இறங்குவதல்ல… அதுதான் உயர்ந்த நிலை!” – ‘பத்தா’ வெற்றி விழாவில் அட்லியின் நம்பிக்கை

Latest News, Top Highlights
“மக்களைச் சந்திப்பது கீழே இறங்குவதல்ல… அதுதான் உயர்ந்த நிலை!” – ‘பத்தா’ வெற்றி விழாவில் அட்லியின் நம்பிக்கை ‘பத்தா’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் தயாரிப்பாளர் அட்லி பேசிய உரை, வழக்கமான வெற்றி விழா வாழ்த்துகளைத் தாண்டி, தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் குறித்த அவரது கனவுகளையும் வெளிப்படுத்தியது. ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அதன் வசூல் மட்டும் காரணமாக இருக்கக் கூடாது என்றும், அந்தப் படைப்பை உலக அளவுக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியும் அவசியம் என்றும் அட்லி குறிப்பிட்டார். குறிப்பாக, நல்ல படங்களை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். “மக்களைச் சந்திப்பது கீழே இறங்குவது அல்ல; மக்களைப் பார்ப்பதுதான் உலகத்தின் மிக உயர்ந்த நிலை” என்ற அட்லியின் கருத்து, விழாவில் கவனம் பெற்றது. ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை மக்களிடம் கொண்டு சேர்...
“விஜய் சேதுபதி படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்… அவருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பு!” – ‘பத்தா’ வெற்றி குறித்து சாய் அப்யங்கர் நெகிழ்ச்சி

“விஜய் சேதுபதி படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்… அவருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பு!” – ‘பத்தா’ வெற்றி குறித்து சாய் அப்யங்கர் நெகிழ்ச்சி

Shooting Spot News & Gallerys
“விஜய் சேதுபதி படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்… அவருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பு!” – ‘பத்தா’ வெற்றி குறித்து சாய் அப்யங்கர் நெகிழ்ச்சி ‘பத்தா’ திரைப்படத்தின் வெற்றி இசையமைப்பாளர் சாய் அப்யங்கருக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், படத்தின் வெற்றிக்கு காரணமான ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். படத்தை பாலாஜி சாருடன் இணைந்து முதன்முறையாகப் பார்த்தபோது, மிகவும் வியந்து போனதாகக் கூறிய சாய் அப்யங்கர், படத்தில் கதாநாயகர்கள் மட்டுமின்றி சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கூட மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பதாக பாராட்டினார். மேலும், தன் மீது நம்பிக்கை வைத்து ‘பத்தா’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய அட்லீ அண்ணாவுக்கு நன்றி தெரிவித்தார். ஆரம்பத்தில் தனது இசையின் மீது நம்பிக்கை வைத்த பாலாஜி சார்,...
‘பத்தா’ படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு பெருமையாக இருக்கிறது… இந்தப் படம் இன்னும் பலரை சென்றடைய வேண்டும் – ஜோஸ் லிஜா மோல்

‘பத்தா’ படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு பெருமையாக இருக்கிறது… இந்தப் படம் இன்னும் பலரை சென்றடைய வேண்டும் – ஜோஸ் லிஜா மோல்

Latest News, Top Highlights
‘பத்தா’ படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு பெருமையாக இருக்கிறது… இந்தப் படம் இன்னும் பலரை சென்றடைய வேண்டும் – ஜோஸ் லிஜா மோல் ‘பத்தா’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகை ஜோஸ் லிஜா மோல், படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். “‘பத்தா’ படத்தைப் பார்க்கும்போதும், படத்தைப் பற்றி வெளியாகும் விமர்சனங்களையும் ரீல்ஸ்களையும் பார்க்கும்போதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினரும் தங்களது பணியை மிகச் சிறப்பாக செய்திருப்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக, படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் இல்லாமல் நல்ல வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார். தன்னை இந்தப் படத்தில் நடிக்க தேர்வு செய்ததற்காகவும், அழகான கதையை திரையில் கொண்டு வந்ததற்காகவும் இயக்குநர் ஆர்.டி. உள்ளிட்ட படக்குழுவினருக்கு அவர் நன...
‘பத்தா’ வெற்றிக்குப் பின்னால் இத்தனை பேரின் உழைப்பு – மனம் திறந்த இயக்குநர் பாலாஜி தரணீதரன்!

‘பத்தா’ வெற்றிக்குப் பின்னால் இத்தனை பேரின் உழைப்பு – மனம் திறந்த இயக்குநர் பாலாஜி தரணீதரன்!

Latest News, Top Highlights
‘பத்தா’ வெற்றிக்குப் பின்னால் இத்தனை பேரின் உழைப்பு – மனம் திறந்த இயக்குநர் பாலாஜி தரணீதரன்! ‘பத்தா’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன், படத்தின் வெற்றிக்கு துணைநின்ற ஒவ்வொருவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். படத்தின் பயணத்தில் தயாரிப்பாளர்கள் அளித்த ஆதரவு மிகப்பெரியது என்று குறிப்பிட்டுள்ள பாலாஜி தரணீதரன், இயக்குநர் அட்லீயின் நேர்மறையான அணுகுமுறையும், அவர் வைத்திருந்த நம்பிக்கையும் ‘பத்தா’ படத்தை இந்த நிலைக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதி குறித்து பேசிய அவர், “ஒரு இயக்குநருக்கு மிகவும் பிடித்த நடிகராக விஜய் சேதுபதி இருந்தார். நான் நினைத்ததை திரையில் சரியாக கொண்டு வருவதில் அவர் எப்போதும் உறுத...