மறைந்த மகேந்திரன் உடலுக்கு இளையராஜா, பாரதிராஜா அஞ்சலி
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.
அவரது மறைவுக்கு சினிமா துறை பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறனர். நடிகர் பார்த்திபன், வைரமுத்து, நடிகை சுகாசினி ஆகியோர் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ள நிலையில், சென்னை பள்ளிக்கரணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்....




