நடிகை லாரா தத்தா பிறந்த தின பதிவு
லாரா தத்தா பூபதி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை , ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதர் மற்றும் முன்னாள் பிரபஞ்ச அழகி ஆவார்.
லாரா இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்திலுள்ள காசியாபாத்தில் ஓர் பஞ்சாபி தந்தைக்கும் ஆங்கிலோ இந்தியத் தாய்க்கும் மகளாக ஏப்ரல் 16, 1978ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை வான்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எல்,கே.தத்தா மற்றும் தாய் ஜென்னிஃபர் ஆகும். இரு மூத்த சகோதரிகளில் ஒருவர் இந்திய வான்படையில் பணி புரிகிறார். லாராவிற்கு ஒரு இளைய சகோதரியும் உண்டு. 1981ஆம் ஆண்டு தத்தா குடும்பத்தினர் பெங்களூருவிற்கு மாறியதால் லாரா பள்ளிப் படிப்பை புனித பிரான்சிசு சேவியர் உயர்நிலைப்பள்ளியிலும் பிராங்க் அந்தோணி பப்ளிக் பள்ளியிலும் படித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளியலில் மக்கள் தொடர்பியல் துணைப்பாடத்துடன் பட்டப்படிப்பை முடித்தார். 2000ஆம் ஆண்டு பிரபஞ்ச...
