Sunday, June 21
Shadow

நடிகை லாரா தத்தா பிறந்த தின பதிவு

லாரா தத்தா பூபதி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை , ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதர் மற்றும் முன்னாள் பிரபஞ்ச அழகி ஆவார்.
லாரா இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்திலுள்ள காசியாபாத்தில் ஓர் பஞ்சாபி தந்தைக்கும் ஆங்கிலோ இந்தியத் தாய்க்கும் மகளாக ஏப்ரல் 16, 1978ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை வான்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எல்,கே.தத்தா மற்றும் தாய் ஜென்னிஃபர் ஆகும். இரு மூத்த சகோதரிகளில் ஒருவர் இந்திய வான்படையில் பணி புரிகிறார். லாராவிற்கு ஒரு இளைய சகோதரியும் உண்டு. 1981ஆம் ஆண்டு தத்தா குடும்பத்தினர் பெங்களூருவிற்கு மாறியதால் லாரா பள்ளிப் படிப்பை புனித பிரான்சிசு சேவியர் உயர்நிலைப்பள்ளியிலும் பிராங்க் அந்தோணி பப்ளிக் பள்ளியிலும் படித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளியலில் மக்கள் தொடர்பியல் துணைப்பாடத்துடன் பட்டப்படிப்பை முடித்தார். 2000ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனால் 2001ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதராக நியமிக்கப்பட்டார்.
2002ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான அரசாட்சியில் நடிப்பதற்கு முதலில் கையெழுத்திட்டார்;இருப்பினும் பல நிதிப்பிரச்சினைகளால் அந்தத் திரைப்படம் 2004ஆம் ஆண்டில்தான் வெளியாயிற்று. அவரது இந்தித் திரைப்படம் அந்தாஸ் 2003ஆம் ஆண்டில் வெளியானது. நல்ல நிதி வசூலைப் பெற்றதுடன் இந்தப்படத்தின் மூலம் அவருக்கு பிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகை விருதும் கிடைத்தது. இதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். வசூலில் குறிப்பிடத்தக்க படங்களாக மஸ்தி (2004), நோ என்ட்ரி (2005), பார்ட்னர் (2007) மற்றும் அவுஸ்ஃபுல் (2010) அமைந்தன.
லாரா நியூயார்க் நகரில் வாழ்ந்தபோது புகழ்பெற்ற அடிப்பந்தாட்ட வீரர் டெரிக் ஜேடருடன் பழகி வந்தார். செப்டம்பர் 2010இல் இந்திய டென்னிசு ஆட்டக்காரர் மகேஷ் பூபதியடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். பிப்ரவரி 16, 2011 அன்று இருவரும் மும்பையின் பாந்தராவில் திருமணப் பதிவாளர் முன்னிலையில் எளிய திருமணம் செய்து கொண்டனர்.  பின்னர் பெப்ரவரி 20, 2011 அன்று கோவாவின் சன்செட் பாயின்டில் கிறித்தவ முறையில் திருமண உறுதிமொழிகளை பகிர்ந்து கொண்டனர்.  ஆகஸ்ட்  1, 2011 அன்று லாரா தனது முதல் மகவை கருவுற்றிருப்பதாக உறுதி செய்தார்.
இவர் நடித்த படங்கள்:  அரசாட்சி, டேவிட்