கண்ட இடத்தில் கை வைத்த சினேகன் – சுஜா பரபரப்பு பாலியல் புகார்!
கட்டிபிடி கலாச்சாரத்தால் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சினேகன், அந்த சர்ச்சையின் வடு மறைவதற்குள் அவருக்கு விழி புதுங்கிவிட்டது. இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர், தலைவன் ரேஞ்சிக்கு கெத்தாக இருந்த நிலையில், தற்போது போட்டி இறுதி நிலையை எட்டுகையில், சினேகனின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, வெறி பிடித்தவரைப் போல நடந்துக் கொள்ளும் சினேகன் சக போட்டியாளர்களை அடிக்க பாய்வதும், அவர்களை கேவலமாக திட்டுவதும் என்று மட்டும் இல்லாமல், பெண் போட்டியாளர்கள் மீது கண்ட இடத்தில் கை வைத்து தடவுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து கணேஷிடம் சுஜா கூறுகையில், “முன்பு பிந்து ஏன் கேமில் இருந்து சென்றார் என்று எனக்கு தற்போது புரிகிறது. சினேகன் ரொம்ப ஆவேசமாக விளையாடினார். ஹரிஷை போட்டு தரதரவென இழுத்தார். அது தப்பு.
...

