பிக் பாஸ் வீட்டில் நடக்கும் மோசடி முன்னால் போட்டியாளர் விமர்சனத்தால் பகீர்
இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழில் மூன்றாவது பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது எலிமினேஷன் ரவுண்ட் தொடங்கப்பட்டு பாத்திமா பாபு, வனிதா என இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷனில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக, தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை டேனி, விமர்சித்துள்ளார்.
இது குறித்து கூறிய டேனி, ”போட்டியாளர்களை வெளியேற்றுவதற்காக நடத்தப்படும் வாக்கெடுப்பு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. பல குளறுபடிகள் நடக்கிறது. கடந்த முறை சென்ராயன் வெளியேற்றப்பட்ட போது பெரிய சந்தேகம் எழுந்தது. என் மனைவியே அவருக்கு அதிக ஆதரவு இருப்பதை உறுதி செய்யும் அளவுக்கு சில இணையதள வாக்கெடுப்புகளை காடினார். ஆனால், அவர் வெளியேற்றப்பட்டது எப்படி என சந்தேகம் எழுந்தது.” என்று தெரிவித...
