
மஹத்தை மிரட்டிய யாஷிகா! – பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்
நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி மோசமாக போய்க்கொண்டே இருக்கிறது என்று தான் சொல்லணும்.
டாஸ்க் முடித்துவிட்ட கலைப்பில் யாஷிகா தூங்கிக்கொண்டிருந்தார். `ஏந்திரி அஞ்சலி... ஏந்திரி' என்ற ரேஞ்சில் மஹத் அவரை எழுப்ப முயற்சி செய்துகொண்டிருந்தார்.
யாஷிகா, தூங்குவதுபோல் பாவலா காட்டுவது, மறைமுகமாகச் சிரிப்பது அனைத்தும் நமக்கே தெரிகிறது, மஹத்துக்கா தெரியாது. `ரூமை என்ன இவ்ளோ அழுக்கா வெச்சிருக்கீங்க, பாய்ஸ் ரூமைப் பாருங்க எவ்ளோ கிளீனா இருக்கு, பாய்ஸ்கிட்ட இருந்து கத்துக்கோங்க' எனப் பெருமை பீத்திக்கொண்டிருந்தார், மஹத். `அதான் நீ ஒரு கேர்ள் இருக்கல்ல' என டைமிங் கவுன்டர் அடித்தார், யாஷிகா. அதையும் சாமர்த்தியமாக எதிர்கொண்ட மஹத், தலையணையால் அடித்து விளையாடிக்கொண்டிருந்தார்.
இதை மட்டும் வேறு யாராவது சொல்லியிருந்தால் மஹத்தின் கன்னம் துடித்திருக்கும், கால் அடிச்சிருக்கும், கரன்ட் பாக்ஸ் வெடித்திருக்க...