
மதுமிதாவுக்கு எதிராக கொந்தளித்த லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த ஐம்பது நாட்களில் கிட்டத்தட்ட பெரும்பாலான நாட்களில் லாஸ்லியா அமைதியாகத்தான் இருந்தார். கமல்ஹாசன் கூட ஒருசில முறை, லாஸ்லியா அமைதியாக இருப்பது தவறு என்றும் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். கமல் சொன்னது போதும்டா சாமி என்று சொல்லும் அளவுக்கு இப்போது பிக் பாஸ் வீட்டின் சண்டைகாரியாக உள்ளார்.
குறிப்பாக அவர் ஆண்களுடன் சேர்ந்து ஆடும் ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை இதுவரை சேர அப்பா என்று கொஞ்சி கொண்டு இருந்த சேரன் அப்பாவும் இப்போது வில்லன் காரணம் கவினுக்கு பிடிக்காது என்பதால்.
இந்த நிலையில் வனிதாவின் வரவுக்கு பின் பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரண்டாக பிரிந்தாலும் லாஸ்லியா பெண்கள் அணிக்கு செல்லாமல் ஆண்கள் அணிக்கு சென்றது யாருக்கும் ஆச்சரியமில்லை. அதுமட்டுமின்றி அவர் ஆண்கள் அணிக்கு சப்போர்ட் செய்து பெண்களை குறிப்பாக மதுமிதாவை வற...