குடும்ப உணர்வுகளுடன் கலக்கும் அதிரடி – ‘பிளாஸ்ட்’ விரைவில் திரையரங்குகளில்!
📰 குடும்ப உணர்வுகளுடன் கலக்கும் அதிரடி – ‘பிளாஸ்ட்’ விரைவில் திரையரங்குகளில்!
தமிழ் திரைப்படத் துறையில் வணிக வெற்றியும், புதிய முயற்சிகளும் ஒன்றாக இணையும் வகையில் தொடர்ந்து படைப்புகளை வழங்கி வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தனது 28வது தயாரிப்பாக ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய வகையில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர், தற்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
இந்த படத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் கதைக்கு வலு சேர்க்கும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.
இயக்குநர் சுபாஷ் கே. ராஜ், தனது முதல் படைப்பிலேயே குடும்ப பாசத்தையும் அதிரடி திரில்லையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்....
