ஜி.வி. பிரகாஷ்–கவுதம் மேனன் இணையும் ‘13’: டிசம்பரில் வெளியாகும் புதிய ஹாரர் த்ரில்லர்
ஜி.வி. பிரகாஷ்–கவுதம் மேனன் இணையும் ‘13’: டிசம்பரில் வெளியாகும் புதிய ஹாரர் த்ரில்லர்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், முன்னணி இயக்குநரும் நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து நடித்துள்ள புதிய ஹாரர் த்ரில்லர் திரைப்படம் ‘13’. மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
‘டார்லிங்’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஹாரர் திரில்லர் களத்தில் நடிக்கும் படமாக ‘13’ அமைந்துள்ளது. இதனால் இப்படம் அவரது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் கே இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், அடர்ந்த காட்டை மையமாகக் கொண்ட மர்மமான சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘13’ என்ற எண்ணைச் சுற்றியுள்ள புதிர், அமானுஷ்ய சக்திகளின் தாக்கம் மற்றும் அதில் சி...
