
சென்னை, “கார்னிவெல் சினிமாஸ் ” திரையரங்க கோலாகல தொடக்க விழாவில் இயக்குனர் மிஷ்கின் பரபர பேச்சு
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் மும்பையை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஸ்ரீகாந்த் பாஷி என்பவரால் 2014ம் ஆண்டு கார்னிவெல் சினிமாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
அது முதல் இதுவரை 104 நகரங்களில் 400 முதல் 500 ஸ்கிரீன்களை நிறுவி , பலமல்டிபிளக்ஸ் திரையரங்கங்களை , நல்ல முறையில் நிர்வாகித்து வரும் "கார்னிவெல் சினிமாஸ் " நிறுவனம் ,சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி சிட்டியில் ஒரே வளாகத்தில் 6 திரையரங்குகளை மிகப் பிரமாண்டமாக நிறுவி .,இன்று கோலாகலமாக திறந்துள்ளது.
EVP - கார்னிவெல் சினிமாஸ் எனும் பெயரில் திகழும் இந்த மல்டி பிளக்ஸில் உள்ள 6 திரையரங்குகளில்
ஸ்கிரீன் -1 ல் 213 இருக்கைகளும் , ஸ்கிரீன் -2 மற்றும் 5-ல் 323,ஸ்கிரீன் 3 & 4 - ல் 221 ,ஸ்கிரீன்- 6 ல் 214 ... இருக்கைகளுமாக இந்த ஒரு மல்டி பிளக்ஸின் 6 திரையரங்குகளில் மட்டும் கிட்டத்தட்ட 1500 இருக்கை வசதிகள் உள்ளன. அதே மாதிர...