
சீனாவில் திரையிடப்பட உள்ள “பரியேறும் பெருமாள்”
சீனாவில் தற்போது நடந்து வரும் ஹைனன் தீவு சர்வதேச திரைப்பட திருவிழாவான ஸ்பிரிங் ஸ்கிரினிங்-னின் ஒரு பகுதியாக ஹைனன் தீவில் உள்ள ஐந்து நகரங்களில் கதிர், ஆனந்தி நடிப்பில், வெளியான பரியேறும் பெருமாள் படத்தை திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. கதிர் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். தவிர, யோகிபாபு, லிஜீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திற்காக பல இடங்களில் 2018 -ம் ஆண்டின் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார், மாரி செல்வராஜ். இந்தப்படம் இப்பொழுது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது என்பது கூடுதல் தகவல்....