
தெலுங்கு சுப்ரீம் ஸ்டார் சிரஞ்சி ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட விஜய் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையிலான மோதல் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர்கள் எப்போது எதற்காக சண்டையிட்டுக் கொள்வார்கள் என யாருக்குமே தெரியாது. ஒருவர் மாற்றி மற்றவர் திட்டிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருப்பது வழக்கம். ஆனால், இப்போது மாநிலம் விட்டு மாநிலம் மாறி சண்டையிடப் போய் நன்றாக திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
விஜய் நடித்து வெளிவந்த ‘கத்தி’ படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ‘கைதி நம்பர் 150’ என ரீமேக் செய்துள்ளார்கள். இந்தப் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலரை நேற்று இரவு வெளியிட்டார்கள். ஒரு இரவுக்குள்ளாகவே 20 லட்சம் பார்வைகளைக் கடந்து தெலுங்குத் திரையுலகில் புதிய சாதனையைப் படைத்துக் கொண்டிருக்கிறது.
சில ஆர்வக் கோளாறு விஜய் ரசிகர்கள் ‘கத்தி’ படம் போல வருமா ?, போய் ‘கத்தி’ டிரைலரைப் பார...