Monday, April 28
Shadow

Tag: #davu #chandran #rambala #santhoshthayanithi

டாவு படம் மூலம் காமெடியில் கால் பதிக்கும் கயல் சந்திரன்

டாவு படம் மூலம் காமெடியில் கால் பதிக்கும் கயல் சந்திரன்

Latest News
சுவாரஸ்யமான தலைப்புகள் மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பை பெறும். காமெடிக்கு பெயர் போன ஒரு இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான தலைப்போடும், அதற்கு தகுந்த அணியையும் அமைத்தால் அந்த படம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். 'தில்லுக்கு துட்டு' படத்தில் மாபெரும் வெற்றியை ருசித்த இயக்குனர் ராம்பாலா, எல்லா தரப்பான மக்களும் கொண்டாடக்கூடிய காமெடியை தருவதில் வல்லுநர். அவர் தற்பொழுது நடிகர் 'கயல்' சந்திரனுடன் இணைந்து 'டாவு' என்ற முழு நீள காமெடி படமொன்றை தொடங்கியுள்ளார். '' இந்த காதல்-காமெடி கதைக்கு சந்திரன் நிச்சயம் பெரும் பலம் சேர்ப்பார். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க அவர் முனைப்போட்டுள்ளார். அவரது தீவிரமும், எங்களது தயாரிப்பாளர் ரகுநாதன் P S அவர்களின் தொலைநோக்கு பார்வையும் இணைந்து 'டாவு' படத்தை சிறப்பாகவுள்ளது. இந்த கதைக்கு 'டாவு' தான் பொருத்தமான தலைப்பு. இன்றைய சினிமாவை ஆதரவள...