Friday, February 7
Shadow

Tag: #deekay #vaibhav

தொடர்ந்து படங்களை இயக்கவே விரும்புகிறேன் – இயக்குநர் டீகே

தொடர்ந்து படங்களை இயக்கவே விரும்புகிறேன் – இயக்குநர் டீகே

Latest News, Top Highlights
யாமிருக்க பயமே’ , ‘கவலை வேண்டாம் ’ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி ’  படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். புதிய படத்திற்கான திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தவரை சந்தித்தோம். இயக்குநரகம் இருந்த நீங்கள் சீதக்காதி படத்தின் மூலம் நடிகராகவும் ஆகியிருக்கிறீர்கள். அது குறித்து ? நடிப்பது என்பது இயக்குவதை விட கடினமாகவே இருந்தது. என்னை நடிகராக்கியதில் பெரும் பங்கு அல்ல முழு பங்கும் இயக்குநர் பாலாஜி தரணீதரனைத் தான் சாரும். ‘நடுவுல கொஞ்சம் பாக்கம் காணோம் ’ என்ற படத்தை பாலாஜி இயக்குவதற்கு முன்பிருந்தே நாங்கள் நல்ல நண்பர்கள். உதவி இயக்குநராக பணியாற்றிய போதும் எங்களின் நட்பு தொடர்ந்தது. அவருடைய இயக்கத்தால் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. இது போன்றதொரு வாய்ப்பு இருக்கிறது என்று அழைத்தார். ப...