Saturday, January 28
Shadow

Tag: #delta #kaja

சூர்யா – கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தனர் கஜா புயல் பாதிப்பில் வீடு இழந்த விவசாயிகளுக்கு

சூர்யா – கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தனர் கஜா புயல் பாதிப்பில் வீடு இழந்த விவசாயிகளுக்கு

Latest News, Top Highlights
கஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். தமிழ்த் திரையுலகில் இருந்து முதல் நபராக; நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஐம்பது லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி விவசாயிகள் துயர் துடைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். அவர்களைத் தொடர்ந்து அவர்களின் ரசிகர் மன்றத்தினர் நேரடியாக களத்தில் இறங்கினர். புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் தங்கி தேவையான உதவிகளைச் செய்தனர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவா விடுதி கிராமம் அருகே 'தண்டா குளத்துக்கரை' என்ற குக்கிராமத்தில் வசித்த 50 குடும்பங்கள் ...