தேவ் – திரைவிமர்சனம் (ரசிகன் ) Rank 3.5/5
ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடித்து இன்று வெளியாகியுள்ள படம் ‘தேவ்’. பேன்டஸி காதல் கதையை களமாக கொண்டு தேவ் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹரீஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இந்த படத்தில் பாடல்கள் பலராலும் வரவேற்பு பெற்றுள்ளது. இசைக்கு ஏற்றவாறு படத்தின் பாடல் காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையை மிகவும் ரசிப்புத்தன்மையுடன் வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆணும், தொழில்துறையில் சாதிப்பது தான் தனது வாழ்க்கை என்று வாழும் ஒரு பெண்ணும் சந்திக்கும் படமே ’தேவ்’.
சாகச விரும்பியான தேவ்,வாழ்கை வாழ்வதற்கு என்று ஜாலியான மனிதர் எதையும் ஈசியாக எடுத்து கொள்ளும் வாலிபர் அவர் வாழ்கையில் ஆண்களையே பிடிக்காமல் வாழும் பெண் இளம்வயதில் தொழில்துறையில் பல சாதனை செய்து வரும் மேக்னாவை சந்திக்கிறான். காதலை கண்டால் விலகும், ஆண்களை வெறுக்கும் மேக்னா தேவ்வை ஏற்றுக்க...