
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கூறும் தன்சிகா நடிக்கும் குறும்படம் “சினம்”
மேற்கு வங்காளத்தில் வாழும் ஒரு விலை மாதுவை சந்திக்கிறார் ஒரு ஆவணப்பட இயக்குனர். அந்த பெண் அந்த தொழிலில் தள்ளப்பட்ட காரணத்தை அறிந்துக்கொள்ளும் இயக்குனர் இறுதியல் யாரால் அவள் இந்த நிலைக்குள்ளானாள் என்பதை கண்டு அதிர்ச்சியடைகிறாள். கதைப்படி இருவரும் பெண்னை கடவுளாக வணங்கும் மதத்தை சார்ந்தவர்கள். அண்டை மாநிலத்திலிருந்து வந்த பெண் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டாள், ஒரு பெண் சமுகத்தில் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகளை விளக்கும் குறும்படம் "சினம்"
விலை மாதுவாக தன்சிகாவும், ஆவணப்பட இயக்குனராக பெங்காலி நடிகை பிடிட்டா பேக் நடித்துள்ளனர். 25 நிமடங்கள் ஒடக்கூடிய இந்த குறும்ப்படத்தை லண்டனில் வசிக்கும் நேசன் திருநேசன் தயாரிப்பில், ஆனந்த் மூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது....