மே மாதம் வெளியாகும் தனுஷ் திரைப்படம்
தனுஷ் ஒரு பன்முக கலைஞர் என்று சொன்னால் மிகையாகது காரணம் அவருக்கு பல திறமைகள் உண்டு அதை அவர் பல முறை நிருபித்துள்ளார் ஒரு இயக்குனராக தயாரிப்பாளராக பாடகராக எழுத்தாளராக சிறந்த நடிகனாக இப்படி சொல்லி கொண்டே போகலாம் இவர் தயாரிப்பில் உருவான படங்கள் அனைத்தும் இக சிறந்த படங்கள் என்று சொல்லலாம் அந்த வகையில் இவரின் சமீப தயாரிப்பு மலையாள படம்
தற்போது தனுஷ் வடசென்னை, மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் எந்தப்படமும் தற்போது ரிலீசாவதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை. அதேசமயம் தனுஷ் மலையாளத்தில் தற்போது மரடோனா என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப்படம் தான் வரும் மே மாதம் ரிலீசாக இருக்கிறது..
மினி ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனமும், தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும் சேர்ந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றன. தனுஷின் முதல் மலையாள தயாரிப்பான 'தரங்கம்' படத்தில் ஹீரோவாக நடி...