
கபடிக்கு முக்கயத்துவம் கொடுத்து உருவாகும் “தோனி கபடி குழு” படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு
தோனி கபடி குழு" படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி செய்திகள் & படங்கள்
படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் ஜேக்கப் பேசுகையில்,
இப்படத்திற்காக முதலில் 2 பாடல்கள் தான் என்று முடிவு செய்தோம். பிறகுதான் 3 பாடல்களை சேர்த்து 5 பாடல்கள் இசையமைத்தோம். கிரிக்கெட், கபடி, மற்றும் காதல் என்று மூன்றும் சேர்ந்த கலவையாக இப்படம் இருக்கும்.
டூரிங் டாக்கீஸ் படத்தின் இயக்குனர் இஷாக் பேசுகையில்,
அபிலாஷ் எனக்கு சிறுவயது முதலே எதிரி. சிறுவயதில் நான் வீட்டிற்கு வரும் நேரத்தில் ‘மைடியர் பூதம்’ நெடுந்தொடர் ஓடிக்கொண்டிருக்கும். அத்தொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் அபிலாஷ் நடித்திருப்பார். நான் சினிமாவிற்கு வந்தபிறகு நானும் அபிலாஷூம் ஒரே அறையில் தங்கியிருந்தோம். எனக்கு ஒரு நல்ல நண்பர். நான் இயக்கிய ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினேன். ஆனால், ‘தோனி கபடி குழு’ படத்தில...