துருவ நட்சத்திரம் படம் டிராப் ஆனதா? அதிகாரப்பூர்வ தகவல்!
அச்சம் என்பது மடமையடா வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன், விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது.
ஆனால் படப்பிடிப்பில் விக்ரம், கௌதமுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு படம் டிராப் ஆனதாக ஒரு தகவல் வெளியானது. இதை விக்ரம் தரப்பு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது. பிப்ரவரி இறுதியில் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் நாயகி மட்டும் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் படபிடிப்பு விரைவில் ஆரம்பம் ஆகும் என்று இப் படத்தின் இயக்குனர் தரப்பில் சொல்லபடுகிறது...
