
துருவ நட்சத்திரம் படத்தில் ‘தல’ அஜித் ஸ்டைலைப் பின்பற்றும் விக்ரம்?
துருவ நட்சத்திரம்' படத்தில் நடிகர் விக்ரம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.'என்னை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன் அடுத்து, விக்ரமை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்த கவுதம் மேனன் 'துருவ நட்சத்திரம்' குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
'இருமுகன்' படத்திற்கு பிறகு 'வாலு' பட இயக்குநர் விஜய் சந்தர் படத்தில் நடித்து வரும் விக்ரம், அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் குன்னூரில் துவங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'துருவ நட்சத்திரம்' படத்தை உலக தரத்தில் ...