மாண்டலின் ஸ்ரீனிவாசுக்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சிறப்பு அஞ்சலி.
மறைந்த இசை மேதை மாண்டலின் ஸ்ரீனிவாசுக்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சிறப்பு அஞ்சலி.
"மாண்டலின் ஸ்ரீனிவாஸ் என்னுடைய குரு.அவருடைய நினைவாக "குருவே நமஹ" என்ற இசை ஆல்பத்தை வெளி இட இருக்கிறேன்.அவருடைய திறமையையும் புகழையும் ஒரு பாட்டில் அடக்கி விட முடியாது. இந்த பாடலை அவரது பிறந்த நாளான பிப்ரவரி 28 ஆம் தேதி வெளி இட உள்ளேன்.
அதே தேதியில் அவரது சகோதரர் மாண்டலின் ராஜேஷ் உட்பட பிரபல இசை மேதைகளான உஸ்தாத் அம்ஜத் அலி கான் ,டிரம்ஸ் சிவமணி ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. அவர்களோடு நானும் இணைந்து இசை வழங்க உள்ளேன்".
2014 ஆம் ஆண்டு மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் தான் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இசை ஆர்வம் ஊட்டியவர் என்பது குறிப்பிட தக்கது.இன்று பல்வேறு மொழிகளில் கொடி கட்டி பறக்கும் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் அவரது குருவுக்காக இந்த பாடலை வெளி இடுவது அவரது குரு பக்த...