“கல்விக்கான குரலாக வரும் ‘அருள்வான்’… மலைகளின் மத்தியில் உருவான போராட்டப் படைப்பு!”
"கல்விக்கான குரலாக வரும் 'அருள்வான்'... மலைகளின் மத்தியில் உருவான போராட்டப் படைப்பு!"
சென்னையில் நடைபெற்ற 'அருள்வான்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு சாதாரண திரைப்பட நிகழ்வாக இல்லாமல், கல்வியின் அடிப்படை உரிமையை பேசும் படைப்பின் பின்னணியில் நடந்த கடினமான பயணத்தை வெளிப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ளார். அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, காளி வெங்கட், ஜான் விஜய், வி.டி.வி. கணேஷ், ஹரிஷ் உத்தமன், 'பருத்திவீரன்' சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை லால்குடி இளையராஜா, படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷ...

