
கல்வியின் அவசியத்தை பேசும் ‘நடு நாடு’ – இறுதிக்கட்டத்தை எட்டிய படப்பணிகள்; விரைவில் இசை வெளியீட்டு விழா
தமிழ் சினிமாவில் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை மையமாகக் கொண்ட படைப்புகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் புதிய திரைப்படமாக ‘நடு நாடு’ உருவாகியுள்ளது.
சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் அறிமுக நாயகனாக அருண்குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக அனுஸ்ரீ நடித்துள்ளார். மேலும், ‘காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற சம்பத் ராம் இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மூத்த நடிகை ராஜஸ்ரீ (கருத்தம்மா ராஜஸ்ரீ) முக்கிய வேடத்தில் நடித்திருப்பதுடன், பல்வேறு திரைப் பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘நடு நாடு’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கடலூர் மாவட்டத்தின் இயற்கைச் சூழல்களிலும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன. சமூக அக்கறை மிக்க கதைக்களத்துடன், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இசையமைப்பாளர் பரணி இசையமைக்கும் இந்தப் படத்திற்கு செந்தில் மாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஆர்.கே. செல்வன் கவனித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான படைப்பாக உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
படத்தின் தயாரிப்பாளர் ஆறுமுகம் மாணிக்கம் மற்றும் இயக்குநர் சந்தோஷ் சேகரன் ஆகியோர், ‘நடு நாடு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

‘Nadu Nadu’ Highlights the Importance of Education; Post-Production Nears Completion, Audio Launch Date to Be Announced Soon
A new socially relevant Tamil film, Nadu Nadu, is set to make its mark by delivering a powerful message on the importance of education. Produced jointly by Sahithya Creations and The King Movie Entertainment, the film blends an engaging narrative with a meaningful social theme.
Introducing Arun Kumar as the lead actor, the film stars Anusree as the female lead. Acclaimed actor Sampath Ram, widely recognized for his performance in Kantara, will be seen in a completely different and challenging role. Veteran actress Rajasree (Karuthamma Rajasree) also plays a pivotal character, alongside several noted artists from the Tamil film industry.
Mounted on a grand scale, Nadu Nadu has been extensively filmed across Cuddalore district and various locations in and around Chennai. The film aims to emphasize the value of education while presenting a compelling story that resonates with audiences of all ages.
The film’s music is composed by hit Tamil music director Bharani, while Senthil Maran has handled the cinematography. Editing is by R.K. Selvan. With post-production work progressing at a brisk pace and nearing completion, the makers are gearing up for the film’s next major milestone.
Producer Arumugam Manickam and director Santhosh Sekaran have announced that the official date for the film’s audio launch will be revealed soon. More updates about Nadu Nadu are expected to be announced in the coming weeks as the team prepares for the film’s release.
