
காமசூத்ரா கதையை வெப்சீரிஸ் ஆக தயாரிக்கும் ஏக்தா இளசுகள் வரவேற்ப்பில்
பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகள் ஏக்தா கபூர் தொலைக்காட்சி தொடர்கள், படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுத்த காமசூத்ராவை அடிப்படையாக வைத்து வெப் சீரிஸ் எடுக்க முடிவு செய்துள்ளாராம் ஏக்தா. இந்த வெப் சீரிஸை இயக்க சரியான ஆளை தேடிக் கொண்டிருக்கிறாராம். ஏக்தாவின் திட்டம் குறித்து அறிந்த இளசுகள் அம்மா, தாயே நீ நல்லா இருக்கணும் என்று வாழ்த்துகிறார்கள். தமிழ் ரசிகர்களை கவர்ந்த நாகினி தொடரை தயாரித்து வருபவர் ஏக்தா. 3வது சீசனில் மவுனி ராய்க்கு பதிலாக கரிஷ்மா தன்னா நாகினியாக நடிக்க உள்ளார். கரிஷ்மாவை தமிழக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....