தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’
ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் 'என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா'. அல்லு அர்ஜூன், அனு இம்மானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கும் இந்த படம் வரும் மே 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
ஆந்திராவில் ஞானவேல்ராஜா ஒரு பிராண்ட். அவர் வெளியிட்ட அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள் தான். அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படத்தை ஞானவேல் தான் தயாரிக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் நடித்த லட்சியம் படத்துக்கு பிறகு இந்த படத்தை . இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்க ஆசைப்பட்டோம். சில காரணங்களால் டப் செய்து ம...