மீண்டும் இயக்குநராகும் தனுஷ்
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தை முடித்த தனுஷ், தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும், `கொடி-2' படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இவ்வாறாக பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை தனஷே இயக்கி, நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வெற்றி பெற்று வரும் தனுஷ், சமீபத்தில் ராஜ் கிரணை வைத்து ‘பா.பாண்டி’ படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தனது அடுத்த படத...