எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடிப்பில் இரண்டரை ஆண்டுகள் கழித்து இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்,
வடநாடு, தென்னாடு என இரு ஊர் மக்களும் பெண் கொடுத்து, பெண் எடுத்து உறவினர்களாக வாழ்ந்து வருகிறார்கள். எதிர்பாராத சமயத்தில் கண்ணபிரான் { சூர்யா } ஊர்கார பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். இதனால், இரண்டு ஊர் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு, இரு ஊரும் பிரிந்துவிடுகிறது.
வக்கீலாக வரும் சூர்யா தனது அப்பா, அம்மா, மாமா என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். கதாநாயகி ஆதினியை { பிரியங்கா மோகன் } சந்திக்கும் சூர்யா காதலில் விழுந்து, அவரையே திருமணம் செய்கிறார். இப்படி ஒரு புறம் கதை நகர, மற்றொரு புறம், பெண்களை தவறான முறையில் வீடியோ எடுத்து அவர்களை தவறான விஷயங்களுக்கு வில்லன் இன்பா ...
