‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை மேலும் சிறப்பித்த விஷ்ணு விஷால் – சூரி நட்பு… மதுரையில் ரசிகர்களை நெகிழ வைத்த இனிய தருணம்!
'கட்டா குஸ்தி 2' வெற்றியை மேலும் சிறப்பித்த விஷ்ணு விஷால் – சூரி நட்பு... மதுரையில் ரசிகர்களை நெகிழ வைத்த இனிய தருணம்!
'படத்தை ஊரே கொண்டாடுகிறது' – வீடியோ கால் மூலம் 'கட்டா குஸ்தி 2' படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி; ரசிகர்களிடம் வைரலாகும் நட்பின் அழகிய தருணம்!
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள, இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம், ஜூலை 3 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்ப ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் கொண்டாடப்படும் இந்த வெற்றி, படக்குழுவினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ளும் நோக்கில், கதாநாயகர் வி...
