இயக்குனர் குடும்பத்திலிருந்து ஒரு புதுமுக நடிகை காயத்ரி
கலைப்புலி தாணு தயாரிப்பில் முதல் படமாக உருவாகி வெற்றி பெற்ற படம் "யார்"
அந்த படத்தின் இயக்குனர்களில் ஒருவர் தான் கண்ணன் ...பின்னர் யார் கண்ணன் என்ற பெயரில் பல படங்களை இயக்கியனார்...இயக்குனர் மகேந்திரனின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட அவர் நல்ல பாடலாசிரியரும் கூட.
அவர் எழுதிய "அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா சொல்லித் தந்த பூமி தந்தையல்லவா" என்ற பாடல் இன்றும் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.
சமீபத்தில் நடிகரான இவர் பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்..யார் கண்ணன் - ஜீவா தம்பதிகளின் வளர்ப்பு மகள் காயத்திரி நடிகையாக அறிமுகமாகிறார்..
சில விழாக்களில் காயத்திரியை பார்த்த பலர் ஏதோ நடிகை போலிருக்கிறது என்று காயத்திரியின் காது பட பேசப் போக நடிக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகமாகி விட்டதாக சொல்கிறார்.
16 வயது என்பது சினிமா அறிமுக கதாநாயகிகளுக்கு சரியான வயது என்கிற நடை முறையை இவர் புரிந்து கொண்டு ...