‘டாக்ஸிக்’ படத்தின் பிரம்மாண்டத்திற்கு பின்னால் நின்ற பெண் சக்தி! கீது மோகன்தாஸை கொண்டாடிய படக்குழு
‘டாக்ஸிக்’ படத்தின் பிரம்மாண்டத்திற்கு பின்னால் நின்ற பெண் சக்தி! கீது மோகன்தாஸை கொண்டாடிய படக்குழு
இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் இயக்குநர் கீது மோகன்தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு வெளியிட்டுள்ள பிரத்யேக பின்னணிக் காணொலி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
பொதுவாக ஒரு திரைப்படத்தின் நட்சத்திரங்களே அதிகம் பேசப்படும் நிலையில், இந்த முறை ‘டாக்ஸிக்’ படக்குழு படைப்பின் பின்னால் இருக்கும் இயக்குநரின் அர்ப்பணிப்பையும் தலைமைத்துவத்தையும் முன்னிறுத்தியுள்ளது. வெளியிடப்பட்டுள்ள BTS (Behind The Scenes) காணொலியில், கீது மோகன்தாஸ் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், பிரம்மாண்டமான திரைப்படத் தயாரிப்பை முன்னின்று வழிநடத்தும் திறமையான தலைவராகவும் காட்சியளிக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை வடிவமைப்பது, நடிகர்களின் நடிப்பை செதுக்க...
