தமிழ் சினிமாவில் நல்ல காமடி நடிகர்களுக்கு பஞ்சம்
தமிழ் சினிமாவில் காமடி நடிகர்களுக்கு பஞ்சமாகி விட்டது. இந்த துறையில் பிரபலமான காமடி நடிகர்களாக சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், விவேக் மற்றும் வடிவேலு ஆகியோர் இருந்தவர். இந்நிலையில் தற்போதைய ஜென்ரேசனில் காமடி ந்டிகர்க்ளுடு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காமடி நடிகர்கள் ஹீரோவாக மாற விரும்புவதும், அல்லது ரசிகர்களை சிரிக்க வைக்க புதிய ஐடியாக்கள் இல்லாமல் இருப்பதுமே காரணமாக இருந்து வருகிறது.
நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்ததுடன், அரசியலில் நுழைந்தது காரணமாக சினிமா துறையில் மறைமுகமாக தடை செய்யப்பட்டு விட்டார். பின்னர் விவேக் மற்றும் சந்தானம் முன்னணி இடத்தை பிடித்தனர். சந்தானம் முன்னணி காமடி நடிகராக மாறிய நிலையில் ஹீரோவாக நடித்தார். இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு படம் தவிர மற்ற படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
நடிகர் சூரி கொஞ்ச நாட்கள் காமடியில் கலக்கி வந்தார். அவரது ஆங்கிலத்தை த...